முதல்பக்கம்அறிமுகம்கவிச்சோலைகட்டுரைகள்சிறுகதைகள்படித்துச்சுவைத்தவைசைவமும் தமிழும்

குறளும் நிகழ்வும்கணினிக்கட்டுரைகள்மென்பொருள்யுனிகோட் கட்டுரைகள்நிகழ்வுகள்உங்கள் எண்ணங்கள்




 
இங்கு தொகுக்கப்பட்டிருக்கும் கட்டுரைகள் யாவும் திரு.சிங்கை கிருஷ்ணன் அவர்களால் எழுதப்பட்டவை. இவற்றைத் தொகுத்து இங்கு தருவதில் பெருமகிழ்ச்சியடைகின்றது 'எழில்நிலா' வலைத்தளம்.

இக்கட்டுரைகள் பற்றிய உங்கள் கருத்துக்களைத் தெரிவிக்க...
திரு.சிங்கை கிருஷ்ணன்
 

 
கண்ணோடு கண்

பெருங்கதை - உஞ்சைக் காண்டம்

கொங்கு நாட்டின் பேரிலக்கியம் பெருங்கதை; கொங்குவேளிர் யாத்தது.

உதயணன் அக் காப்பியத் தலைவன்; யானையை அடக்கும் திறம் தெரிந்தவன்.

மாமன்னன் பிரச்சோதனன் உதயணனை வஞ்சகத்தில் சிறைப்படுத்தினான்.
யூகி, உதயணனின் உயிர்த் தோழன்; அறிவில் தெளிந்தவன்.
பிரச்சோதனனின் பட்டத்து யானை 'நளகிரி'க்கு மதம்
ஊட்டினான். யானை நகரை கலக்கியது.

யானையை அடக்க முடியும்? 'உதயணன்' என்பதே மறுமொழியாயிற்று.

சிறை கதவு திறந்தது. உதயணன் யாழ் மீட்டி யானையை அடக்கினான்;
யாழில் மயங்கிய யானை மீதேறி மன்னன் பிரச்சோதனனின் மாளிகை சென்றான்.

யானை மதங் கொண்டதற்கான காரணம் யாதென வினவினன் பிரச்சோதனன் அவனுக்கு
மறுமொழி சொல்லத்தான் தலை நிமிர்ந்தான் உதயணன். ஆனால் அங்கே.....
விழிகளை ஈர்க்கும் காந்தத்துண்டு !
அவை மன்னவன் மகளாம் வாசவதத்தையின் விழிகள் !
பார்வைப் பரிமாறல்கள்..... அவை காதலின் தொடக்க வார்த்தைகள்....

ம்....

"ஆயத் திடையோன் பாசிழைப் பாவை
யானை மிசையோன் மாமுடிக் குருசில்
இருவரும் "அவ்வழி பருகுவனர் நிகழ...."