முதல்பக்கம்அறிமுகம்கவிச்சோலைகட்டுரைகள்சிறுகதைகள்படித்துச்சுவைத்தவைசைவமும் தமிழும்

குறளும் நிகழ்வும்கணினிக்கட்டுரைகள்மென்பொருள்யுனிகோட் கட்டுரைகள்நிகழ்வுகள்உங்கள் எண்ணங்கள்




 
இங்கு தொகுக்கப்பட்டிருக்கும் கட்டுரைகள் யாவும் திரு.சிங்கை கிருஷ்ணன் அவர்களால் எழுதப்பட்டவை. இவற்றைத் தொகுத்து இங்கு தருவதில் பெருமகிழ்ச்சியடைகின்றது 'எழில்நிலா' வலைத்தளம்.

இக்கட்டுரைகள் பற்றிய உங்கள் கருத்துக்களைத் தெரிவிக்க...
திரு.சிங்கை கிருஷ்ணன்
 

 
இலக்கண இலக்கியம்

தமிழ் மொழி உயர் செம்மொழிகளுள் ஒன்றெனப் போற்றப்படுகின்றது. ஏறத்தாழ இரண்டாயிரம்
ஆண்டுகட்கு மேற்பட்ட இலக்கிய, இலக்கண மரபுகள் இன்றளவும் இம்மொழியின்கண் போற்றி வளர்க்கப்பட்டுள்ளமை இதற்குத் தலையாய காரணம் ஆகும். தமிழின் இலக்கிய இலக்கண மரபுகளைக் கூர்ந்நு நோக்குவோர்க்குக் காலப்போக்கில் மரபுகள் சில நெகிழ்ந்திருப்பதும்
சில புதிய மரபுகள் கிளைத்திருப்பதும் புலனாதல் கண்கூடு. அகம், புறம் என்னும் சங்க இலக்கிய பாடுபொருள்மரபு மாறி நீதி அல்லது அறக்கருத்துக்கள் பாடுபொருளாகக் கொள்ளப்பட்டதைச் சங்க மருவிய இலக்கியங்கள் உணர்த்துகின்றன. அதன்பின் பக்தி இலக்கியமும், பின்னர் சிற்றிலக்கிய வகைகளும், ஐரோப்பிய வருகையை ஒட்டிப் புதிய இலக்கிய வகைகளும் தோற்றம் பெற்றமை இலக்கிய வரலாறு அறிந்த ஒன்றே. இவ்வகை இலக்கியங்களின் பாடுபொருள் அகமும் புறமும் மட்டுமா? இல்லையே.

பாடுபொருள் மட்டுமல்லாது பாடல் வடிவத்திலும் ஒரே மரபு பின்பற்றப் பட்டதென்பதற்குச் சான்று இல்லை. அகப்பொருள் கலி, பரிபாட்டு என்னும் இருவகைபாவிலும் பாடப்பட வேண்னூயூம் என்பது தொல்காபியர் அமைத்த இலக்கணம். ஆயின் சங்க அகப்பாடல்கள் சிரியப்பாவில்தான் உள்ளன. பிற்காலத்தில் கட்டளைக் கலித்துறை என்னும் பாவகை அகப்பொருளைப் பாடுவதற்கு ஏற்றதாகக் கொள்ளப்பட்டுள்ளது. நீதிக் கருத்துக்கள் பெரும்பான்மை வெண்பாவில் பாடப்பட்டன. காப்பியங்களில் விருத்தப்பாவின் செல்வாகு மேலோங்கியுள்ளது. பழம்மரபின் நெருக்கடியிலிருந்து முகிழ்த்தவைதான் தாழிசை, துறை, விருத்தம் என்னும் பாவினங்கள். இவற்றை நோக்க பாடலின் வடிவத்திலும் காலப்போக்கில் மாற்றங்கள் நேர்ந்துள்ளமை உணரலாம். இவ்விடத்தில் தமிழறிஞர்கள் யாவரும் ஒப்புகின்ற ஒரு கருத்து யாதெனில், பாடுபொருள் பாடல்வடிவம் என்னுமிவற்றில் ஏற்பட்ட மாற்றங்கள் மரபை முற்றிலும் புறக்கணித்து எழுந்தவையன்று; மரபையட்டிப் புதிதாகக் கிளைத்தவை என்பதாம்.

காலத்தின் தேவை, சமூகநிகழ்வுகளின் தாக்கம், புதியன புனையும் ஆர்வம் போன்றவை காரணமாகப் பாடுபொருள் மரபும் பாடுநெறிமரபும் சிற்சில மாற்றங்கள் அடைகின்றன
இத்தகு மாற்றங்கள் இயல்பாகவும் ஏற்பட்டிருக்கலாம், படைப்பாளன் விருப்பபடியும் ஏற்பட்டிருக்கலாம். ஆனால் அவை மரபை முற்றாகப் புறக்கணியாமல் மரபை ஒட்டி எழுதலே பெருன்பான்மை. இவ்வாறு நிகழும் மரபு மாற்றங்களைச் சிதைவாகக் கொள்ளாமல், நெகிழ்வாகக் கருதி ஏற்றல் இலக்கிய வளர்ச்சிக்கும் செழுமைக்கும் வழிகோலும் என்பதில் ஐயமில்லை. அத்துடன் படைப்பாளனின் தனிப்பட்ட உரிமையும் இதனால் மதிக்கப்படுகின்றது