|
சுற்றிலும் பச்சைப்பசுமையான வயல்களைக்
கொண்ட அந்தப் புளியாநல்லூர் கிராமத்தின்
நடுவே வந்து நின்ற பேருந்தில் இருந்நு
இறங்கிய சுமதிக்கு தனக்காக அங்கு
காத்துக்கொண்டிருந்த தன் அண்ணன் பாலாவை
கண்டவுடன் கண் கலங்கியது.
"
நீ எப்படிம்மா இருக்க
... "
என்றான் பாலா.
"
நா
...
நா
...
நல்லாயிருக்கேண்ணா
... "
என்று சொல்லும்போதே சுமதியின் தொண்டையை
சோகம் அடைத்தது.
"
என்ன மன்னிச்சிரும்மா
...
இந்தக்கேள்விய நான் ஒன்கிட்ட
கேட்டிருக்கக்கூடாது
"
என்றான் பாலா.
"
போகட்டுண்ணா
...
நீ எப்படி இருக்க
,
அண்ணி எப்படி இருக்காங்க
" ---
சுமதி.
"
எல்லாரும் நல்லாயிருக்கோம்மா
... " ---
பாலா.
"
நீ காலேலேந்து ஏதாவது சாப்டியாம்மா
... "
என்றான் தொய்ந்த குரலில் பாலா.
"
அரசம்பட்டியில டிஃபன் சாப்டுட்டுதாண்ணா
பஸ் ஏறினேன்
" ---
சுமதி.
அரசம்பட்டியிலிருந்து புளியாநல்லூர்
வருவதற்கு ஒன்றரை மணிநேரம் பயணம் செய்ய
வேண்டும்
.
இருவரும் வீட்டை நோக்கி நடக்கிறார்கள்
.
வழியில் தென்னந்தோப்பைப் பார்த்ததும்
சுமதியின் கண்களில் நீர் கோர்த்துக்கொண்டன.
ஒரு காலத்தில் மாந்தோப்பு
,
புளியந்தோப்பு
,
தென்னந்தோப்பு
,
கால்வாய்
,
ஆறு
,
குளம்
,
நீரோடை ஆகியவற்றில் இவர்களின் கால்கள்
பதிந்ததால்தான் அவ்விடங்களுக்கு மதிப்பே
ஏற்பட்டது.
அவ்வூரில் இவர்களின் கால்தடம் பதியாத இடமே
கிடையாது என சொல்லலாம்
.
அப்படியும் அவ்வூரில் இவர்களின் பாதம்
படாத இடங்கள் எந்தக் காலத்திலோ பாவம்
செய்தவை.
மாலை பள்ளி முடிந்து வீடு வந்தவுடன்
இவர்கள் இருவரும் வீட்டுப்பாடங்களை
முடித்த மறுகனமே வெளியே விளையாடச் சென்று
விடுவார்கள்
.
விளையாடி முடித்து இரவுதான் வீடு
திரும்புவார்கள்
.
ஒரு முறை மாந்தோப்பில் இருக்கும் ஒரு
மாமரத்தை சிலர்
வெட்டிக்கொண்டிருக்கும்போது அதில்
குடிகொண்டிருந்த இரு காதல் பறவைகளை
எடுத்து அந்தக் காதல் ஜோடியைக் காப்பற்றி
அப்போதே காதலுக்கு பச்சைக்கொடி காட்டினாள்
சுமதி.
வீட்டை நெருங்க நெருங்க சுமதியின் மனம்
கணக்க ஆரம்பித்தது
.
அவள் மனதில் இனம் புரியாத சோகம் ஒன்று
தாக்கியது.
வீட்டில் இருந்த பாலாவின் மனைவி மகேஸ்வரி
,
சுமதியை வரவேற்றாள்.
"
வாம்மா
...
சுமதி
...
எப்படிம்மா இருக்க
... "
என்றாள் மகேஸ்வரி.
"
நல்லாயிருக்கேன் அண்ணி
... "
என்றாள் சுமதி வாய்வார்த்தைக்காக.
வீட்டிற்குள் நுழைந்தவுடன் அப்பாவின்
நிழலைப் புகைப்படத்தில் மாலையுடனும்
,
அம்மாவை ஒரு மூலையில் முடங்கியபடியும்
பார்த்த சுமதியின் மனது குமுற ஆரம்பித்தது.
இவற்றைப் பார்த்தவுடன் நினைவலைகள் அவள்
கண் முன் ஓடத்தொடங்கியது.
ஒரு காலத்தில்
, "
அழகான குடும்பம்
...
அளவான குடும்பம்
... "
என்று ஊர்மக்கள் அனைவராலும் போற்றப்பட்ட
குடும்பம்
,
இன்று இப்படி இருப்பதற்கு சுமதியும் ஒரு
காரணம்.
வீட்டின் முற்றத்தில் அமர்ந்து எல்லோரும்
ஒன்றாக பல்லாங்குழி
,
ஆடுபுலி ஆட்டம் மற்றும் பல ஆட்டங்கள்
விளையாடிய காலம் ஒரு காலம்.
திருவிழா என்று வந்துவிட்டால்
,
ஊர்மக்கள் அனைவரும் ஒன்று கூடி விழாவை
நடத்த
,
ஊரே களை கட்டும்
.
அதேபோல் வீட்டில் விசெஷம் என்று வந்தால்
அனைவரும் வரிந்து கட்டிக்கொண்டு
விசெஷத்தில் பங்கேற்பர்.
சிறு வயதில்
,
சுமதி சமைக்கிறேன் பேர்வழி என்று
சமையற்கட்டில் அடித்த ரகளைக்குப் பரிசாக
,
அவள் அம்மாவிடமிருந்து செல்லமாக வாங்கிய
அடியை அவளால் இன்றளவும் மறக்கமுடியாது.
சுமதி பருவத்தை எட்டியவுடன் ஊரே வந்து
அவளது விசெஷத்தில் கலந்து கொண்டது.
இப்படி சந்தோஷமாக இருந்த அவர்களது
குடும்பத்தின் மீது யார் கண் பட்டதோ
தெரியவில்லை
.
வாழ்வில் பௌர்ணமி மட்டுமே ஒளி
வீசிக்கொண்டிருக்காது
,
அமாவாசையும் வரும் என்பது போல அவர்களது
வாழ்க்கையிலும் இருள் பற்றத் தொடங்கியது.
சுமதிக்கு அசலூர்க்காரன் ஒருவன் மீது
காதல் வர
,
ஒரு கால கட்டத்தில் அக்காதல்
பெற்றோர்களுக்குத் தெரிய வர
,
சுமதிக்கு சிறைவாசம் வீட்டிலேயே
...
அதையும் மீறி சுமதி பெற்றோர்களுக்குத்
தெரியாமல் திருமணம் செய்து கொண்டு
அவர்களிடம் ஆசிர்வாதம் வாங்க வர
,
அவர்கள் சுமதியையும்
,
அவள் கணவனையும்
,
வசைமாறி பொழிந்ததுடன்
,
அவமரியாதையாகவும் பேசி தலைமுழுகி விட்டனர்
.
இதனைத் தாங்க முடியாமல்
,
சுமதியின் கணவர் குடும்பத்திற்குச்
சென்றால்
,
அவர்களும் இவர்களை தலைமுழுகி விட இவர்கள்
சென்னைக்கு வந்து தனியாக குடியெறினர்.
சுமதி போனதற்குப் பின் நோய் வாய்ப்பட்ட
அவளின் தந்தை
,
சில மாதங்களிலேயே இயற்கை எய்த
,
அந்த சோகத்திலேயே அவளது அம்மாவிற்கு
பித்து பிடித்துவிட்டது.
தந்தையின் ஈமைச்சடங்குகளுக்கூட சுமதியை
அனுப்பவில்லை அவளது கணவன்
.
சுமதிக்கு ஒரே துணையாக இருந்த அவளது
கணவனும் விபத்து ஒன்றில் உயிரிழந்து விட
,
தனி மரமானாள் சுமதி
.
அவள் சோகத்திற்கு அளவே கிடையாது.
இந்த நினைவுகள்
,
ஒரு கனவு போல அவள் மனத்திரையில் ஓடி
முடிந்தது.
சுமதியின் கணவன் இறந்தவுடன்
,
அவள் அண்ணன் பாலா
,
இங்கு வரச்சொல்லி கடிதம் போட்டு
வற்புறுத்த பல மாதங்களுக்குப் பின் இங்கு
வந்திருக்கிறாள் சுமதி.
"
அம்மா
...
என்ன மன்னிச்சிரும்மா
... "
என்று கதறி அழுகிறாள் சுமதி
,
தன் அம்மாவிடம்.
சுமதியின் முகத்தைக்கூடப் பார்க்காமல்
தலையைக் குனிந்தபடியே அவளது அம்மா
, "
என் புருஷன் போயிட்டாரு
...
என் புருஷன் போயிட்டாரு
... "
என்று சொல்லியபடியே கைகளில் உள்ள கணவரின்
புகைப்படத்தில் தன் முகத்தைப்
புதைத்துக்கொண்டு தனக்குத்தானே
பேசிக்கொண்டிருந்தாள்.
"
என்னம்மா
...
இன்னும் சின்னக்கொழந்த மாதிரி அழற
... " ---
பாலா.
"
போய்க்குளிச்சிட்டு வாம்மா
...
சாப்புடலாம்
... "
என்றாள் அண்ணி.
சுமதி குளித்துவிட்டு அனைவரும் சாப்பிட்டு
முடித்த பின் பாலாவும்
,
அவன் மனைவியும்
,
சுமதியை தனியே கூப்பிட்டனர்.
"
சுமதி
...
இன்னும் எத்தனை நாளும்மா இப்படியே
இருக்கப்போற
...
நீ இன்னொரு கல்யாணம் பண்ணிக்கிட்டு
குடியும் குடித்தனமுமா இருக்கறத நான்
பாக்கனும்மா
... " ---
பாலா.
"
என்ன மன்னிச்சிருண்ணா
...
என் புருஷனோட கனவலைகள்ளயும்
,
நம்ம அப்பா அம்மாவோட நினைவலைகள்ளயும்
வாழ்ந்தே என் காலத்த தள்ளிடறேண்ணா
...
தயவு செஞ்சு என்ன வற்புறுத்தாத
...
என் உயிர் போனா அது இந்த வீட்டுலதான்
போகனுண்ணா
... "
என்று கண் கலங்க பாலாவின் தோள்களில்
சாய்கிறாள் சுமதி.
|