கணினியைப்
பயன்படுத்துபவர்களில் நெருங்கோப்புகளைப்(zip files) பற்றி அறியாதார்
இருக்கமுடியாது. அந்த அளவிற்கு அதன் பயன் விரிந்துபட்டது. இணையத்தில்
இடவசதிகளின்பொருட்டும், இறக்கிக்கொள்ள எடுத்துக்கொள்ளும் கால அளவினை
குறைப்பதின் பொருட்டும் இறக்கிக்கொள்ளத்தக்க கோப்புகளை நெருங்கோப்புகளாகவே
அமைப்பது வழக்கம். நமது கணினியிலும் நெடுநாள்கள் வைத்திருக்கவேண்டிய
தொகுக்கப்பட்ட கோப்புகளை நெருங்கோப்புகளாக மாற்றி சேமித்துவந்தால் இவை
வண்தட்டில் அதிக இடங்களை ஆக்கிரமிப்பு செய்வதிலிருந்து தடுக்கமுடியும்.
நெருங்கோப்புகளை
அமைப்பதற்கு பல நிறுவனங்கள் செயலிகளை எழுதி விற்பனை செய்துவருகின்றன.
இவற்றில் பல, வலைத்தளங்களில் இலவசமாக இறக்கிக்கொள்ள கிடைக்கின்றன.
மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் வின்சிப் (winzip) என்னும் செயலி இவற்றில்
மிகவும் புகழ்பெற்றது.
நம்மில் பலர்
நெருங்கோப்புகளை விரிப்பது பற்றி அறிந்திருந்தாலும், அதன் மூலம்
கேப்புகளைச் நெருக்குவது பற்றி அறிந்திலர் சிலர் இவைபற்றியும்
அறிந்திருந்தும், பெரிய கோப்புகளை நெருக்கி ஒன்றுக்கு மேற்பட்ட
நெகிழ்தட்டுகளில் சோந்ந்து பற்றி அறிந்திலர். இவைபற்றி நாம் படிப்படியாக
இக்கட்டுரையில் காண்போம்.
தேவையானவை : உங்கள் கணினியில் வின்சிப் ஏற்றப்பட்டிருக்கவேண்டும்
இல்லையேல் கீழ்கண்ட வலை முகவரியில் அதனை இலவசமாக இறக்கிக்கொள்ளலாம்.
http://www.winzip.com/downauto.cgi?winzip80.exe
அ) நெருங்கோப்புகளை விரித்தல்
மிக எளிது. உங்கள்
கணினியில் வின்சிப் ஏற்றப்பட்டிருந்தால் தானாகவே நெருங்கோப்புகளின் படவுரு
வின்சிப் படவுருவடிவத்தில் கட்சியளிக்கும். அதன்மேல் இருமுறைசுட்டவும்.
வின்சிப் செயலி இலவசமாகப் பெறப்பட்டதாக இருந்தால் நீங்கள் அவர்களின் உரிம
ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டதற்கு அடையாளமாக்
I Agree என்னும் பொத்தனை அழுத்தவேண்டும். (பல இடங்களில் இது தொடரும்)
திறக்கும் சாளரத்தில்,
நெருக்கப்பட்டுள்ள கோப்புகளின் பெயர்கள் அவை நெருக்கப்பட்ட தேதி, உண்மை
அளவு அதன் நெருக்கசதவிகிதம், நெருக்கியபின் அதன் அளவு மற்றும் அவை ஒரு
கோப்பகமாக நெருக்கப்பட்டிருந்தால்
அதன் பாதை போன்றவை காணப்படும் (படம் -1)

இப்பொழுது அதன்
கருவிப்பட்டையிலுள்ள EXTRACT என்னும் பொத்தனை அழுத்தி நாம் எந்த
கேப்பகத்தில் விரித்து எழுதவேண்டுமோ அதன் பாதையைத் தெரிவு செய்தால் போதும்.
சில நொடிகளில் வேலை முடிந்துவிடும்.
குறிப்பு : ஒரு
கோப்பகமாக நெறுக்கப்பட்டிருந்தால் வின்சிப் செயலி நீங்கள் காட்டும்
பாதையில் அந்த கோப்பகத்தை உறுவாக்கி அதற்குள் விரிக்கப்பட்ட கோப்புகளைக்
கொண்டுசேர்க்கும்.
ஆ) ஒரு முழு
கோப்பகத்தையும் நெருங்கோப்பாக்கல்
மிக மிக எளிது. அந்த
கேப்பகத்தின் படவுருவின் மீது உங்கள் சுட்டியின் வலதுபுற பொத்தனை
அழுத்தவும். உங்களது கோப்பகத்தின் பெயர் கானல் என்று வைத்துக்கொண்டால்
உங்களுக்கு காட்டும் பட்டியில் (MENU) (ADD TO KAANAL.ZIP) KAANAL.ZIP
என்னும் நெருக்கோப்பை அமை என்னும் கட்டளை காணப்படும் அதன் மீது ஒரு சுட்டு.
அங்கேயே உங்களுக்கு KAANAL.ZIP என்னும் நெருங்கோப்பை
உறுவாக்கித்தந்துவிடும்.
(படம் - 2)

குறிப்பு : கானல்
கோப்பகத்தின் மீதும் கானல் நெருங்கோப்பின் மீதும் வலது சுட்டியால் தட்டி
அதன் அளவு வித்தியாசத்தை கண்டு பிரமிப்படையுங்கள். தேவையானால்
நெருங்கோப்பின் பெயரை மாற்றிக்கொள்ளுங்கள்.
இ) ஒரு நெருங்கோப்பில் புதிய கோப்புகளை இணைத்தல்
இது ஒரு முக்கியமான
தேவை. நாம் ஏற்கனவே நெருங்கோப்பொன்றை உறுவாக்கியுள்ளோம். அதன் பெயர் கானல்.
ஆனால் அதற்குள் வேறு சில கோப்புகளையும் இணைக்கவேண்டியுள்ளது. இதுவும் மிக
எளிது
ஏற்கனவே அமைத்துள்ள
கானல் நெருங்கோப்பை திறந்துகொள்ளுங்கள்
புதிய சாளரத்தில் நீங்கள் இணைக்கவேண்டிய கோப்பு உள்ள கோப்பகத்தையும்
திறந்துகொள்ளுங்கள்
உங்களது புதிய கோப்பில் சுட்டியால் அழுத்தி இழுத்துச்சென்று நெருங்கோப்பில்
விடுங்கள் (DRAG AND DROP) ஒரு புதிய சாளரம் தோன்றி இந்த புதிய கோப்பை
நெருங்கோபில் இணைக்கவா? என்று கேட்கும் "இணை" என்பதற்கு ஆதரவாக ADD என்னும்
பொத்தனை அழுத்தவும். (படம் -3)

அவ்வளவுதான் புதிய
கோப்பு இணைக்கப்பட்டுவிட்டது.
குறிப்பு : புதிய கோப்பு
இணைக்கப்பட்டதற்கு பிறகு நீங்கள் கானல் நெருங்கோப்பை விரித்தால் புதிதாக
இணைக்கப்பட்ட கோப்பு கானல் என்னும் கோப்பகத்திற்கு வெளியேயும், பிற
கோப்புகள் கானல் கோப்பகத்திற்கு உள்ளேயும் இருக்கும். ஏன் என்று சிந்தித்து
தெளிக.
ஈ) ஒரு கோப்பகத்தில்
உள்ள சில குறிப்பிட்ட கோப்புகளை மட்டும் நெருக்குதல்
ஏற்கனவே குறுந்தலைப்பு
(ஆ) ல் விளக்கியது போன்றே. இங்கு நீங்கள் கோப்பகத்தை திறந்து அங்கு
விரும்பிய கோப்புகளைமட்டும் சுட்டியால் தெரிவுசெய்து (ஒன்றுக்கு மேற்பட்ட
கோப்புகளை CONTROL விசையை அழுத்திக்கொண்டு சுட்டியால் தெரிவு
செய்யவேண்டும்) பின் சுட்டியின் வலது பொத்தனை அழுத்தி, அது தரும் பட்டியில்
நெருங்கோப்பில் சேர் (ADD TO ZIP) என்னும் கட்டளையைச் சுட்டவேண்டும். (படம்
-4)
திறக்கும் புதிய
சாளரத்தில் நெருங்கோப்பிற்கான பெயரைத்தந்து ADD என்னும் பொத்தனை
அழுத்தவும். முடிந்தது வேலை.
உ) தானாகவே
விரித்துக்கொள்ளக் கூடிய நெருங்கோப்பாக்கல்
(self extracting zip files)
இவை மிகவும் பயனுள்ளவை.
நீங்கள் ஆக்கிய நெருங்கோப்புகளை விரித்துக்கொள்ள பயனார் கணினியில் வின்சிப்
செயலியின் தேவை இருக்காது. தானகவே விரித்துக்கொள்ளக் கூடிய நெருங்கோப்புகள்
ஒரு செயலியாக மாற்றப்பட்டு, EXE என்ற நீட்டிப்புடன் பதிவு செய்யப்படும்.
அதனை இருமுறை சுட்டினால் போதும் தானாகவேகோப்புகளை விரித்து சேமித்துவிடும்.
எப்படி உருவாக்குவது?
நீங்கள் ஆக்கிய
நெருங்கோப்பை வலது சுட்டியினால் தட்டி அங்கு Create self extractor(.exe)
என்னும் கட்டளையைத் தெரிவு செய்க. பின்னர் வரும் சாளரத்தில் (பார்க்க படம்
-5) OK என்னும் பொத்தனை தேர்வு செய்க இப்பொழுது நீங்கள் கானல்.EXE என்னும்
செயலியை உங்களது கோப்பகத்தில் கானலாம். அதனை இருமுறை சுட்டி நடப்பதைப்
பாருங்கள்...
ஊ) அதிக அளவினதான
கோப்புகளை நெருக்கி
ஒன்றுக்கு மேற்பட்ட நெகிழ்தட்டுகளில் சேர்த்தல்
ஏற்கனவே குறுந்தலைப்பு
(உ) வில் கூறியபடி உங்களது நெருங்கோப்பில் சுட்டியால் தட்டி அங்கு Create
self extractor(.exe) என்னும் கட்டளையைத் தெரிவு செய்க. பின்னர் வரும்
சாளரத்தில் (பார்க்க படம் -5) Safe spanning Method என்னும் வசதியை தெரிவு
செய்துகொண்டு OK பொத்தனை தட்டுங்கள் பின்வரும் சாளரம் உங்களுக்கு
வழிகாட்டும் (பார்க்க படம் 6)

இவ்வாறு அமைக்கும்
நெகிழ்தட்டுகளை நீங்கள் ஒன்று இரண்டு என்று பெயரிட்டுக்கொள்வது நல்லது.
எனெனில் மீண்டும் இவற்றை விரிக்கும் பொழுது வரிசைப்படி நீங்கள்
நெகிழ்தட்டுகளை இயக்கியில் சேர்க்கவேண்டியிருக்கும்.
எ) ஒரு
நெருங்கோப்பிலிருந்து ஒன்று அல்லது மேற்பட்ட கோப்புகளை நீக்கல்
நெருங்கோப்பை இருமுறை சுட்டி திறக்கவும்,
பின்னர் அழிக்க வேண்டிய கோப்பை வலது சுட்டியால் தட்டி DELETE என்னும்
கட்டளையை தேர்வு செய்யவும். உறுதிப்படுத்த விளையும் சாளரத்தில் OK யை
சுட்டினால் தெரிவு செய்த கோப்பு அழிக்கப்படும்.
மா.பரமேஸ்வரன்
Systems Analyst,
ahainfo.com, Dubai.
உங்கள் விமரிசனங்களை எழுத
param@emirates.net.ae
|