|
நமது கட்டுரையில் ஒரு
குறியைக் குறிக்கும் பொழுது அதன் மேல்நிலையில் தொடங்கி "\" என்னும்
குறியைப் பயன்படுத்தி விரித்து
எழுதுவோம். எ.டு. HKEY_CLASS_ROOT\Software\Classes
கூடு 1 -
HKEY_CLASS_ROOT
இதன் முக்கிய பணியானது
அ) கேப்புகளின்
வகைகளையும், அவற்றோடு தொடர்புடைய மென்பொருள்களையும் அடையாளம் காட்டுவது.
எடுத்துக்காட்டாக "DOC"
என்ற நீட்டிப்பைக் கொண்ட கோப்புகளை நாம் சுட்டியால் தட்டி
திறக்கும்பொழுது அவை மைக்ரோசாப்ட் வேர்டு மென்பொருளின் உவியோடு மட்டுமே
திறக்கப்படுவதை காணமுடியும். அது போலவே, பிற XLS, TXT மற்றும் பல கணினியில்
ஏற்றப்பட்டுள்ள கேப்புகளின் நீட்டிப்பு வகைகளும் அவைகளோடு தொடர்புடைய
மென்பொருள்களின் பெயர்களும் இங்கு சேமிக்கப்பட்டுள்ளன.
ஆ) OLE - வசதிக்கான
தகவல்கள், மற்றும் மொன்பொருளோடு தொடர்புடைய அனைத்து விபரங்கள்.
படவுரு (ICON), விளக்கப் பெயர், மற்றும் சுட்டியின் வலது பொத்தனை தட்டும்
போது வரவேண்டிய
பட்டியின்(MENU) உள்ளடக்கம் மற்றும், மென்பொருள்களுக்கான துணைநிரல்களின்
பாதைகள் மற்றும் குறியீடுகள்.
கூடு 2 -
HKEY_CURRENT_USER
இங்கு
பயனார் மற்றும் அவர் சார்ந்த தகவல் பதிவுகள் இடம் பெற்றிருக்கும். நமது
கணினியை ஒன்றுக்கு மேற்பட்டவர் பயன்படுத்தும் வகையில் அமைக்கும் பொழுது,
ஒவ்வொரு பயனாருக்கும் தனித்தனி அமைப்புகளை நிறுவமுடியும்.
அவ்வாறு அமைக்கும் பொழுது ஒவ்வொரு பயனாருக்கும் தனியே சத்தங்கள், படங்கள்,
நிலைத்திரையில்(DESKTOP) காணப்படும்
படவுருக்கள் வேறுபட்டிருக்கும். இவை இந்த கூட்டில் காணப்படும் AppEvents
என்னும் குறியின் கீழ் பதியப்பட்டுள்ளன.
(HKEY_CURRENT_USER\AppEvents)
அடுத்ததாக கட்டுப்பாட்டு பளகத்தின் முக்கிய செயல்களின் அமைப்புகள்
ControlPanel என்னும் துணைக்குறியின் கீழ் பதியப்படுகிறது.
(HKEY_CURRENT_USER\ControlPanel) நாம் செய்யும் மாறுபாடுகள் உடனுக்குடன்
பதிவகத்தில் எழுதப்படுகின்றன.
அடுத்த முக்கிய
கிளையானது Software (HKEY_CURRENT_USER\Software) ஆகும். இங்கு கணினியில்
ஏற்றப்பட்டுள்ளஅனைத்து மென்பொருள்களின் விபரங்கள், அவைகளின் அமைப்புகளில்
உள்ள மாறுபாடுகள் போன்றவை பதியப்பட்டுள்ளன எடுத்துக்காட்டாக சில சமயம் சில
மென்பொருள்களை இயக்கும் பொழுது அவைகள் திரையில் சிறிய அளவான விண்டோ வில்
தோன்றுவதைக் காணலாம். நமது வோடு (MS-WORD) மென்பொருளில் சில சமயங்களில் பல
கருவிப்பட்டைகள் (toolbars) காணாமல்
போயிருக்கும், பின்னர் அவைகளை நாம் தருவித்துக் கொண்டால் அதன் பின்
இயக்கும் ஒவ்வொரு முறையும் அவை தோன்றும். மேலும் தனிப்பயனுக்காக ஒவ்வொரு
பயனாரும் மென்பொருளில் செய்யும் மாறுபாடுகள் தெளிவாக குறித்து
வைத்துக்கொள்ளப்படும்.
கூடு 3 -
HKEY_LOCAL_MACHINE
அடுத்த முக்கிய கிளையான
HKEY_LOCAL_MACHINEல் அக்கணினி சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் அடக்கம்
முறையே வண்கலனின் முக்கிய பாகங்கள், பிற உபகரணங்கள், கணினியின்
பொருத்தப்பட்டுள்ள சிப்புகளின் வகை, வேகம், வண்தட்டுகளின் அளவு என பட்டியல்
நீண்டு கொண்டே போகும்.
HKEY_LOCAL_MACHINE
என்னும் கூட்டில் காணப்படும் Software என்னும் கிளையானது கணினிக்கும்,
அதில் ஏற்றப்பட்டுள்ள மென்பொருளுக்குமிடையில் தொடர்புள்ள தகவல்களைப்
பதிந்துவைத்துள்ளது. அதேசமயத்தில் HKEY_CURRENT_USER\Software என்னும்
கிளையானது மென்பொருளின் பயனார் செய்த தனிப்பயன் மாற்றங்களை பதிந்து
வைத்திருக்கும்.
கூடு 4 -
HKEY_USER
பயனார் செய்த தனிப்பயன்
மாற்றங்களை நிரந்தரமாக பதிந்து வைத்திருக்கும். இந்த கூடானது
HKEY_CURRENT_USERடன் ஒரே தகவலையே பகிர்ந்து கொள்ளுகிறது. ஒவ்வொருமுறையும்
பயனார் கணினியைத் துவக்கும் பொழுது. அவர் செய்த தனிப்பயன் மாற்றங்கள்
HKEY_CURRENT_USER கூட்டில் எழுதப்படுகின்றன. இந்நிலையில்
HKEY_CURRENT_USER கூடு HKEY_USERன் ஒரு பிரதியாக செயல்படும்.
கூடு 5 - HKEY_CURRENT_CONFIG
இந்தக் கூடும் கணினியின்
அப்போதைய வண்கலன், அதோடு இணைக்கப்பட்டுள்ள பிற கருவிகளின் தகவல்களைக்
கொண்டிருக்கும்
இது நாம் ஏற்கனவே பார்த்த HKEY_LOCAL_MACHINE\Config என்னும் கூட்டின்
தகவலையே சுட்டிக்காட்டிக் கொண்டிருக்கும்.
இது கூடு விண்டோஸ் NT மற்றும் 2000 னில் சிறிது வேறுபடும்.
HKEY_CURRENT_CONFIG\Config என்னும் கிளைக்குப் பதிலாக
HKEY_CURRENT_CONFIG\System\CurrentControlSet\Hardware\Profile
என்னுமிடத்தில் எழுதப்பட்டிருக்கும்.
கூடு 6 - HKEY_DYN_DATA
இங்கு விண்டோஸ்
விணைத்தளத்தின் முக்கிய வசதியான PLUG AND PLAY க்கான தகவல்களைப் பதிந்து
வைத்திருக்கிறது இந்த கூடானது ஒவ்வொரு முறையும் கணினி துவக்கப்படும் போதும்
எழுதப்பட்டு பின்னர் நிறுத்தப்படும் போது அழிக்கப்படுகிறது
ஒவ்வொரும் முறையும் புதிய கருவிகளை கணினியில் இணைக்கவோ, நீக்கவோ செய்யும்
போது இக்கூடானது அந்த தகவல்களை உடனுக்குடன் எழுதிக்கொள்ளும். இது விண்டோ
ஸின் NT/2000 வினைத்தளங்களில் இணைக்கப்படவில்லை.
பதிவகத்தில்
மாற்றங்கள் செய்வது எப்படி
நீங்கள் நினைப்பது போல
பதிவகத்தில் மாற்றங்கள் செய்வது அவ்வளவு கடினமானது அல்ல. ஆனால் நீங்கள்
அதைப் பற்றி மேலோட்டமாகவாவது புரிந்து கொள்ளவேண்டும். அது மட்டுமல்லாது
மாற்றங்களைச் செய்வதற்கு முன்னால் அதனை பிரதி எடுத்துக்கொள்ளவேண்டியது
அவசியம். அப்பொழுதுதான் ஏதாவது தவறு நிகலின் உடனே முந்தைய பிரதியைப்
பயனபடுத்தி கணினியை இயக்க முடியும்.
பதிவகத்தை திறந்து
எழுதுவதற்கான முக்கிய நிரல் மைக்ரோஸாஃப்ட் நிறுவனத்தால் அளிக்கப்படும்
REGEDIT.EXE. மேலும் விண்டோஸ் NT மற்றும் 2000 னில் கூடுதலாக REGEDT32.EXE
என்னும் செயலியும் உள்ளது இது REGEDIT.EXE ல் செய்யமுடியாத NT வினைதளம்
சார்ந்த மாற்றங்களைச் செய்யப்பயன்படுகிறது.
எடுத்துக்காட்டாக நாம் நமது கணினியின் internet Explorer ன்
கருவிப்பட்டையின் பின்புலத்தில் ஒரு படத்தை (பிட்மேப்), பதிவகத்தை
திருத்துவதன் மூலம் தோன்றும்படி செய்வது எப்படி என்பதைப் பார்ப்போம்.
இது HKEY_CURRENT_USER\Software\Microsoft\Internet Explorer\Toolbar என்னும்
குறியை(key) திருத்துவதன் மூலம் சாதிக்கமுடியும். (படம் -3)
|