இது வலைத்தல யுனிகோடு அஞ்சல்களை எப்படி படிப்பது / எழுதுவது என்பது
பற்றியதாகும்.
தொடர்ந்து வரும் மற்ற வினாக்களுக்கும் விடையளிக்க முயல்வோம்.
Q: யுனிகோடு படிவங்களை, அஞ்சல்களைப் படிக்க குறைந்த பட்சம் என்னிடம்
எவ்வகை கணினி இருக்க வேண்டும்?
A: Win98 இருக்க வேண்டும். அதில் IE5 பொருத்தப் பட்டிருக்க வேண்டும்.
Windows2000, Win Xp ஆகியவை யுனிகோடை முழுமையாக கையாளும்.
Win98 யுனிகோடை *முழுமையாக* கையாளாது என்றாலும் IE5 பொருத்தப்
பட்டிருந்தால் யுனிகோடு HTML படிவங்களைப் படிக்கலாம்.
Q: யுனிகோடு அஞ்சலை எப்படி படிப்பது?
A: view> Encoding> Unicode (UTF-8) என்பதைத் தெரிவு செய்தால் போதும்.
Q: யுனிகோடு அஞ்சலை எப்படி அனுப்புவது?
A: Compose பகுதிக்குச் சென்றபின் அஞ்சலை எழுதுவற்கு முன்னர்
view>Encoding>Unicode(UTF-8) என்பதை தெரிவு செய்து கொள்ள
வேண்டும். பின்னர் யுனிகோடில் அஞ்சலை எழுதியோ அல்லது திஸ்கி இலிருந்து
மாற்றப்பட்ட யுனிகோடு பகுதியை ஒட்டியோ அனுப்பலாம்.
Q: யுனிகோடு படிவங்கள் கணினியில் இடத்தை அடைத்துக் கொள்ளும்
என்கிறார்களே?
A: உண்மைதான். அனுகூலங்கள் கிட்டும்போது சில சிறு தியாகங்களைச்
செய்துதான் ஆக வேண்டும். இது எந்த ஒன்றுக்கும் பொருந்தும். தகுதரம் 8
பிட்(8bits) குறியீட்டில் இயங்குவது. யுனிகோடு 16 பிட் குறியீட்டில்
இயங்குவது. மின்னஞ்சல்களை உலாவி மூலம் படிப்பதால் உங்களுக்கு பாதிப்பு
ஏற்படப் போவதில்லை. அவுட்லுக் போன்றவற்றில் பெற்று படிக்கும்போது இது
நேரலாம்.
Q: யுனிகோடு அஞ்சலிலுள்ள எழுத்துக்களை படிக்க முடிந்தாலும் கி,கீ போன்ற
எழுத்துக்கள் "க ி". "க ீ" போன்று சிதறிக் காணப்படுகிறதே?
A: இதற்கு இரண்டு காரணங்கள் இருக்கலாம். எழுத்துரு தகுந்ததாக
இல்லாதிருக்கலாம். அல்லது உங்கள் கணினியில் ups10.dll என்ற கோப்பு
இல்லாமலோ அல்லது பழைய பதிப்பாகவோ இருக்கலாம். இதன் மேலதிக
விபரத்தைப் பெற
இப்பக்கத்தைப் பார்வையிடுங்கள். எழுத்துருக்களைப் பெற இணைப்புக்களும்
தரப்
பட்டிருக்கின்றன.
Q: யுனிகோடு அஞ்சல் படிக்க எந்த எழுத்துக்களைப் பயன்படுத்த வேண்டும்?
A: மைக்ரோசாப்ட் தரும் "லதா"(Win2000, XP உடன் வரும்) எழுத்துருவை
பயன்படுத்தலாம். TheneeUniTx, aAvarangal போன்ற எழுத்துக்களைப்
பயன்படுத்தலாம். TSCu என தொடங்கும் எழுத்துக்களையும் பாவிக்கலாம். முரசு
அஞ்சலில் யுனிகோடு குறியீட்டுடன் எழுத்துகள் இருக்கின்றன.
Q: Win98 இல் யுனிகோடு அஞ்சல்களை அனுப்ப முடியுமா?
A: முடியும். ஆனால் தகுதரத்தில் எழுதி அதை யுனிகோடாக மாற்ற வேண்டும்.
நேரடியாக யுனிகோடில் எழுத இயலாது. இதற்கு
முரசு(http://www.murasu.com)
போன்ற செயலிகளும், சுரதாவின்
http://www.suratha.com/reader.htm இணைய வழி எழுத்துரு மாற்றிகளும்
உள்ளன.
Q: யுனிகோடு எழுத்துகளை வெட்டி ஒட்டும்போது கேள்விக் குறிகளாய்
தெரிகிறதே.
A: யுனிகோடு எழுத்துக்களை ஏற்றுக்கொள்ளாத செயலிகளில் இது ஏற்படுகிறது.
Q: யுனிகோடு அஞ்சலகளைப் படிக்க அடிக்கடி என்கோடிங்கை UTF-8 க்கு மாற்ற
வேண்டியுள்ளதே.
A: வலைத்தள அஞ்சல் சேவையில் ஒவ்வொரு முறை அஞ்சல் படிக்கப் படும்போதும்
அந்த அஞ்சல் வலை பக்கங்களில் குறிக்கப் பட்டுள்ள என்கோடிங் என்னவோ
அதுதான் வரும். யுனிகோடு அஞ்சல் என அறிய வந்தால் என்கோடிங்கை
யுனிகோடிற்கு மாற்ற வேண்டும்.
Q: இது யுனிகோடு அஞ்சலா என்று எப்படி அறிந்து கொள்வது?
A: கணினியைப் பொறுத்தவரை அது என்னமாதிரி என்கோடிங் அஞ்சல் என
அறிந்து கொள்ளாது. ஆனால் எழுத்துக்கள் படிக்க இயலாமலோ அல்லது எழுத்துக்
குறிகளாகவோ காணப் பட்டால் யுனிகோடு அஞ்சல் என்று ஊகித்துக்
கொள்ளலாம். என்கோடிங்கை மாற்றுவதன் மூலம் அஞ்சலைப் படிக்கலாம்.
அனுப்புவது
யுனிகோடில் அமைந்த அஞ்சல் என்று குறிப்பிட அஞ்சல் எழுதும்போது subject
பகுதியில் "Ucode" என்று குறிக்கலாம்.
Q: சில நேரம் சதுரங்கள் அஞ்சலில் காணப் படுகிறதே?
A: அஞ்சலில் அல்லது யுனிகோடு படிவத்தில் கையாளப் பட்டிருக்கும் எழுத்து
அல்லது குறியீடு யுனிகோடு எழுத்துருவில் (font) இல்லாதிருக்கலாம். அந்த
எழுத்திற்கு இணையான யுனிகோடு குறியீடு (unicode value)
இல்லாவிட்டால் அந்த எழுத்து வர வேண்டிய இடத்தில் சதுரம் வரும்.
Q: ஓர் அஞ்சல் யுனிகோடில் எழுதப் பட்டிருக்கிறது. ஆனால் யுனிகோடு
என்கோடிங்(UTF-8) ஐத் தேர்வு செய்தும் அஞ்சலைப் படிக்க இயலவில்லையே?.
A: இந்த அஞ்சல் அனுப்பப் படும்போது யுனிகோடு என்கோடிங் (UTF-8) தேர்வு
செய்யப் பட்டிருந்தாலும் எழுத்துக்கள் TSC ஆக் இருந்தால் இப்படி நேரும்.
தட்டச்சு
செய்யும்போது யுனிகோடைத் தேர்வு செய்திருக்கிறோமா என்று உறுதி செய்து
கொள்ள வேண்டும். எழுத்துக்கள் TSC இல் இருந்தால் யுனிகோடிற்கு மாற்றிய
பின் அனுப்ப வேண்டும்.