|
|
|

|
| |
 |
வணக்கம்.
இந்த 'எழில் நிலா' தமிழ் வலைத்தளம் ஒரு
மாத, வார சஞ்சிகை அல்ல.
இது எனது 'வலைத்தள மின் நூலகம்'.
இங்கு எனக்குப் பிடித்த சில ஆக்கங்களை ஒழுங்குபடுத்தி ஏற்றியுள்ளேன்.
சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள், எனக்குப் பிடித்த, படித்துச் சுவைத்த,
சிந்தித்த சில பகுதிகள், மற்றும் உங்களுக்கு உதவக்கூடிய தமிழ் இணையம்
பற்றிய சில கடந்த கால, நிகழ்காலத் தகவல்களையும் இணைத்துள்ளேன்.
நீங்களும் இந்த மின் நூல் நிலையத்திற்குள் நுழைந்து உங்களுக்கு விருப்பமான
பகுதிகளை வாசிக்கலாம். இவற்றில் சில உங்களுக்கும் பிடிக்கலாம் அல்லது
பயன்படக்கூடியதாகவும் இருக்கலாம். அப்படியெனின் அது எனக்கு மிகவும்
மகிழ்ச்சியாக இருக்கும்.
மேலும் இத்தளம் தமிழ் யுனிகோட் எழுத்து முறையில் அமைக்கப்பட்டிருக்கின்றது.
இத்தளம் பற்றிய உங்கள் கருத்துக்களை எழுதுங்கள். அவை கவனத்தில்
எடுத்துக்கொள்ளப்படும்.
தமிழ் யுனிகோட் எழுத்து முறை இன்னும் பிரபல்யம் ஆகாத காரணத்தினாலும் சில
கணினி இயங்கு தளங்கள் இன்னமும் இந்த எழுத்து முறையை திரையில் சரியாகக்காட்ட
முடியாதிருப்பதனாலும் இந்தத்தொழில் நுட்பத்தை முழுமையாகப் பயன்படுத்த
முடியாமல் இருக்கின்றது.
ஆனால் மிக விரைவில் இந்தத் தொழில் நுட்பம் தமிழ் இணையத்தை ஆட்கொள்ளும்
என்பதில் மிகுந்த நம்பிக்கை உண்டு.
அப்போது தமிழ் யுனிகோட்டில் அமைந்திருக்கும் தமிழ் ஆவணங்களை நீங்கள்
தமிழிலேயே, தேடும் இயந்திரங்கள் கொண்டு இலகுவாகத் தேடிக்கொள்ள முடியும்.
அந்நாள் வெகு தொலைவில் இல்லை.
நன்றி.
நட்புடன்,
மகேன்
கனடாவிலிருந்து..
ஜனவரி
14, 2003
இந்த 'எழில் நிலா' வலைத்தளம் ஜூலை
14, 1997
ல் முதன் முதலில் ஆரம்பிக்கப்பட்டது:
பின்னர் ஜனவரி
14, 2003
அன்று இத்தளம் முற்றும் முழுதாக தமிழ்
யுனிகோடிற்கு மாற்றப்பட்டது.
இந்த இடைக்காலத்தில் நடந்த போராட்டங்களை கீழேயிருக்கும்
தமிழ் கணனியில் நான் கடந்து வந்த சில அனுபவங்கள்.. என்ற கட்டுரையைப் படித்துத் தெரிந்துகொள்ளலாம்.
தமிழ் யுனிகோடை பலரும் பயன்படுத்தவேண்டும் அதனை ஊக்குவிக்க வேண்டும் என்ற
நோக்கில் பல கட்டுரைகள், உதவிப்பக்கங்கள் மற்றும்
யுனிகோட் எழுத்துருக்கள், செயலிகள் என்பனவற்றைத்தொகுத்து இங்கு வழங்கியுள்ளேன்.
கட்டுரைகளை வரைந்தும் செயலிகளை உருவாக்கியும் அளித்த அறிஞர்கள், கணிஞர்கள்
அனைவருக்கும் நன்றிகள் பல.
1997
லிருந்து
www.pathcom.com/~mahend என்ற முகவரியில் இயங்கி வந்த இந்த
வலைத்தளம் டிசம்பர் 14, 2002
லிருந்து www.ezilnila.com என்ற சொந்த முகவரியுடன் இயங்க
ஆரம்பித்துள்ளது.
தமிழ் கணினியில் நான் கடந்து வந்த சில அனுபவங்கள்.. |
| |
|
|
 |
|
|