10. வாழ்த்துரைகள் - 5  
 
டாக்டர் ராஜரங்கன் அவர்களிடமிருந்து வந்த வாழ்த்தை நான் இப்போது வாசிக்கிறேன்.:-

மனம் கனிந்த வாழ்த்துகள்! அரிய கவிதைகளை உயரிய முறையில் பொருத்தமான படங்களுடன்

தொகுத்து புது முயற்சியாக

இணையத்தில் வெளியிடுவது பாராட்டுக்குரியது. உங்கள் கவிதைகளை என்றுமே ரசிக்கும் குழுவில்

நான் உண்டு. குறிப்பாக

'தமிழ்' என்ற முதல் கவிதையே ஒரு புதிய உத்தியை அறிமுகப்படுத்துவதை ரசி

த்தேன். அந்தாதி படித்ததுண்டு. ஒரே பாடலின்

முதலடி ஈற்றடியாக வருவது ' ஒரு பாடல் அந்தாதி ' என்று அழைக்கப்படலாமோ? மற்றக் கவி

தைகள் ஒவ்வொன்றும் மனித

மனத்தின் பல பரிமாணங்களைத் தொட்டுப் பார்க்கின்றன. யுத்தம் பற்றி, கண்ணதாசன் பற்றி,

நட்பு பற்றி, கவிதை ரசனை பற்றி,

காதல் பற்றி, எத்தனை எத்தனை எழுதிக் குவித்திருக்கிறீர்கள்! உங்கள் உற்சாகம்

தொடரட்டும். மேலும் மேலும் எழுதிக் குவியுங்கள்.


அன்புடன்
ராஜரங்கன், தமிழ்நாடு




அன்புக் கவிஞர் புகாரி அவர்களை "நிலாவிலும் கற்கள்" என்ற அற்புதமான வலைத்தளத்தின் வாயிலாக சந்தித்த நாள் என்றும் என் வாழ்வில் புனிதமானது. அவரது "அன்புடன் இதயம்" கவிதைத் தொகுதி சென்னையிலிருந்து தபாலில் வந்து என் கைகளில் விழுந்த ஒரு அமுதப்பிரசாதம். அந்த நாளையும் மறக்க முடியாது.

இவரது கவிதைகளை (சு)வாசிக்கும்போது, இந்த கவிஞருக்குள் ஒரே ஒரு இதயம்தான் இருக்கின்றதா என்று எனக்கு சந்தேகம் எழுவதுண்டு. இத்தனை அன்பைத் தளும்பத் தளும்ப அள்ளித் தந்துவிட ஓரு இதயம் அல்ல, அணுக்களிலெல்லாம் இதயம் கொண்டுள்ளார் இவர் என்றே எண்ணத் தோன்றும் எனக்கு. இந்த அறிய கவிக்கு என் சிறிய சமர்ப்பனம்.

கவிதேவன் காலணி

படைத்தவனுக்கும்
பார்ப்பவனுக்கும்
இடைப்பட்ட ஜாதி நீ!

புத்தரல்லாத பாமரனுக்கும்
புத்தி கூறும் போதி நீ!

·
அழுக்கைக் கண்டு, வழுக்கிச் செல்லாமல்
கழுவிச்செல்வாய் செம்மலரே!
களைகள் கண்டு விலகிச் செல்லாமல்
களைந்து விடுவாய் வெண்மலரே.

சோறு உண்ணும்போதெல்லாம்
உழவனை எண்ணும் உன்னத மனம்.
உழைப்பவனுக்கு உற்றது கோரி
குரலெழுப்பும் புண்ணிய குணம்!

பூக்களுக்கு வலிக்காமல்
எட்ட நின்று ரசித்திருப்பாய்! ஆனால் -
செவ்வாய்க்குப் பாலம் போட்டு
சென்று வந்து சிரித்திடுவாய்.

இருட்டு உன்னை மிரட்டாது
வெளிச்சம் உன்னை எழுப்பாது.
சண்டை உன்னைச் சளைக்காது
சத்தம் உன்னைத் துளைக்காது.

மண்ணில் வாழும் புழுவில் தொடங்கி
விண்ணில் சொலிக்கும் சூரியன் வரையில்
அத்தனைக்கும் இன்ப துன்பம் -
உண்டு என்கிறாய்.

உனது கண்கள் காணும் காட்சி
ஒருமுறையேனும் பார்த்திடனும்.
நெகிழவைக்கும் உன்னைப்போல
உண்மையாக உருகிடனும்.

உன் விழியின் வழியாக
பூவுலகம் பார்த்திடனும்
உன் செவியின் வழியாக
உயிரோசை கேட்டிடனும்
உன் சிறகில் இறகாக
வரம் ஒண்ணு வாங்கிடனும்.

பிரம்மதேவன் அருள் பெற்ற
மகராணித்தேர்வலம்.
கவித் தேவன் காலணியில்
நான்போகும் ஊர்வலம்!



இந்தியாவின் தவப்புதல்வன்,
இன்னொரு மகாத்மா,
இங்கு தமிழுக்கு வாழ்த்த வந்தது,
இளைய கவிக்கு இதை விட சிறப்பு என்ன இருக்க முடியும்.

"நாளை என்ன செய்ய வேண்டுமோ
அதை இன்றே செய்
இன்று என்ன செய்ய வேண்டுமோ
அதை இப்பொழுதே செய்"

-
APJ.அப்துல்கலாம்.

விழாவைக் கண்ட மகிழ்வுடன்
வணக்கம் வாழ்க வளமுடன்.

சிவாபி.



அன்பிற்குரிய விழா நாயாகரும், அன்புடன் இதயம் நூலை" ஆக்கியளித்த கவிஞருமான சகோதரர் புகாரி அவர்களை ஏற்புரை வழங்க வருமாறு அன்புடன் அழைக்கின்றேன்.

( கைதட்டல்கள்....கர ஒலிகள்...மலர்மாலை அணிவிப்புகள்...ஆரத் தழுவி கைகுலுக்கி வாழ்த்துக்களை ஒவ்வொருவராகச் செய்ய கவிஞர் அன்பு மழையில் நனைந்து கொண்டிருக்கிறார்.)


மணியம்

 
 

'எழில் நிலா'வின் சிறப்புப்பக்கம்